யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தவிர்ந்து வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச மருத்துவமனை களிலும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளது. திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் (புதிய சுற்றறிக்கையின்படி) கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே அவை வழங்கப்படவில்லை. இதை வழங்குமாறு வலியுறுத்தியே இன்று பணிப்புறக்கணிப்பு வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது
Post a Comment