Header Ads

test

தமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி!


முள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது.
உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் இவ்வாறு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள ஹற்றன் நஸனல் வங்கியில், கடந்த 18 ஆம் திகதி அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கொழும்பில் உள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என்று குறித்த வங்கியின் கொழும்புத்தலைமை வாதிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

அதேவேளை கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த வங்கியின் கிளிநொச்சிக்கிளையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியில் இருந்து இடை நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களி ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றவர் அக்கரைப்பற்றையும் சேர்ந்தவர் என்றும் ஆரம்பத் தகவல்கள் அறியத்தருகின்றன.

No comments