Header Ads

test

யாழில் காலைக்கதிர் பத்திரிகையின் பணியாளர் மீது வாள்வெட்டு!


காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் பத்திரிகை விநியோகஸ்தருமான குடும்பத்தலைவர் இன்று அதிகாலை கும்பல் ஒன்றால் தாக்குதல் நடத்தப்பட்டது. 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே இதனை முன்னெடுத்துள்ளது. தாக்குதலில் படுகாயமைடந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா இராஜேந்திரன் (வயது -55) என்பவரே படுகாயமடைந்தார். பத்திரிகை விநியோகத்துக்கு சென்று திரும்புகையில் கொழும்புத் துறை துண்டிச் சந்தியில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் சராமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. “கும்பலைச் சேர்ந்த 10 பேரும் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். காலைக்கதிர் பத்திரிகை – டான் ரீவியின் பெயர்களைச் சொல்லியே தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் கைக்கோடாரி, வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டன. எனது குடும்ப நிலையைக் கூறி மண்டியிட்டதனால்தான் என்னை உயிருடன் விட்டுச் சென்றனர்” என்று தாக்குதலுக்குள்ளான குடும்பத்தலைவர் தெரிவித்தார். காலைக்கதிர் பத்திரிகையை டான் ரீவி நிறுவனம் நடத்தி வருகிறது. தொழில் போட்டி காரணமாக கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் ஒன்றின் மீது டான் ரீவி நிறுவனம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அவர்களின் தூண்டுதல் காரணமாகவே யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது என முன்னணி சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், நல்லாட்சி அரசின் ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என கூறிவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments