Video Of Day

Breaking News

அசாதாரண காலநிலை: இதுவரை 23 மரணம், 13 பேர் காயம் 160000 பேர் பாதிப்பு


நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் இதுவரையில் 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் இவ்வாறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 43604 எனவும் நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

No comments