Video Of Day

Breaking News

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!


மட்டக்களப்பு வாகரை மாணிக்கபுரம் வாவிக்கரையிலும் வாழைச்சேனை கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாகரை மாணிக்கபுரம் வாவிக்கரையில் காலை 9 மணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் பொதுச் சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஈகைச்சுடர் ஏற்றி இரண்டு நிமிடம் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்தோருக்கு கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது இதேவேளை, வாழைச்சேனை கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி ஆத்மசாந்திவேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

No comments