Video Of Day

Breaking News

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் யோசனை நாளை அமைச்சரவையில்


எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப எத்தகைய கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற யோசனை நாளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வருடாந்த கட்டண சீர்த்திருத்தமும் இதில் உள்ளடங்குவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வுடன், கட்டண சீரமைப்பு தொடர்பில் பேருந்து சங்கங்கள் பரஸ்பரம் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

விலை அதிகரிப்பு மூலம் 20 சதவீத கட்டண அதிகரிப்பு மற்றும் குறைந்த கட்டணமாக 15 ரூபா அறவிடல் போன்ற தீர்மானங்களை அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் முன்வைத்துள்ளது.

அவ்வாறு தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விலை அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது

No comments