Header Ads

test

மே18 நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமே!


முள்ளிவாக்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 திகதி முள்ளிவாக்காலில் இடம்பெறவுள்ளநிலையில் கிழக்கின் தோழமைமிக்க நண்பர்களும் கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் இணைந்து கொண்டு எம்தேசிய உணர்வை வெளிக்காட்ட முன்வர வேண்டும் என தேசத்தின் வேர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
2009. ஆண்டு 18 என்பது தமிழ்மக்கள் வரலாற்றை, தமிழினத்தை வேரோடு அறுக்க சர்வதேசமும் அப்போதய அரசும் இணைந்து மேற்கொண்ட ஓர் இன அழிப்பு சம்பவமே முள்ளிவாய்க்காலில் நடந்தேறியதை யாவரும் அறிவோம். ஆனால் சுடுகாடாய் ஆக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த இனத்தின் வேர்கள் முளையிட்டு துளிர்விட்டு நிற்பதை, எம்மினத்தின் வேர்களை அறுக்க நினைத்த முட்டாள்கள் பார்க்கட்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது ஒரு சாதாரண விடயமல்ல முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை எம் இன அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு இணைந்த தாயக மக்கள் அனைவரும் அந்த முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்வோம். ஒருமித்த எங்கள் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்போம்.

2018 தமிழ் இன அழிப்பு நாளை ஒன்றிணைந்த வடக்கு பல்கலைக்கழக சமூகம், வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சம்மேளனமும் முல்லைத்தீவு மாவட்ட அனைத்து கிராம அபிவிருத்தி சங்கங்களும் இணைந்து இவ் இன அழிப்பு நாளை அனுஸ்ட்டிக்க ஏற்பாடுகளை முன்னெடுத்துவரும் இந்தவேளை இந்த நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கின் தோழமைமிக்க நண்பர்களும் கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் இணைந்து கொண்டு எம்தேசிய உணர்வை வெளிக்காட்ட வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

சிலர் சிங்கள இராணுவமும் இங்கு இறந்துள்ளதால் சிங்கள மக்களையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைக்க வேண்டுமென அறிக்கை விட்டுள்ளதைப் பார்த்தோம். இவ்வாறான செயற்பாடுகளை என்ன செய்ய வேண்டுமென்று மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பிரதேசவாதங்களை எம்மக்கள் மனங்களில் விதைத்து எம்மினத்தை கூறுபோட்டு ஒற்றுமையாக விடாமல் பல நரிகள் இங்கே மிகக் கவனமாக காய்களை நகர்த்தி வருகின்றார்கள். எனவே தற்போதய சூழ்நிலையில் கிழக்கில் தனியாக நினைவேந்தல் நிகழ்வு செய்யப்படத் தேவையில்லையென கருதுகின்றோம்.

ஏதிர்வரும் காலங்களில் இதுபற்றி நாம் ஆராய முடியும். இப்போதைக்கு நாம் இந்நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்காலில் செய்வதே சிறந்தது. அடுத்த வருடம் கண்டிப்பாக கிழக்கிலும் இந்நிகழ்வை செய்வதற்கு நாம் முயற்சிகள் மேற் கொண்டுவருகின்றோம்.

என்பதனையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். இம்முறை முள்ளிவாய்க்கால் சென்றுவர போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments