Header Ads

test

லசந்த படு­கொ­லை கோத்­த­பாய மீது சந்­தே­கம்!


சண்டே லீடர் பத்­தி­ரி­கை­யின் முன்­னாள் ஆசி­ரி­யர் லசந்த விக்­ர­ம­துங்­க­வின் படு­கொ­லைச் சம்­ப­வத்­தில் விளக்­க­ம­றி­ய­லில் உள்ள சிறிலங்கா பிர­திப் காவல்துறை மா அதி­பர் பிர­சன்ன நாண­யக்­கார, முன்­னாள் காவல்துறை மா அதி­பர் ஜயந்த விக்­ர­ம­ரத்ன, சிறிலங்கா முன்­னாள் பாது­காப்புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோர் தொடர்­பு­பட்­டுள்­ள­னர் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பில் விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன என்று கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரிவு கல்­கிசை நீதி­வா­னுக்கு அறி­வித்­தது. பிர­திப் பொலிஸ் மா அதி­பர் பிர­சன்ன நாண­யக்­கா­ர­வுக்­குப் பிணை கோரி நேற்று அவ­ரது சட்­டத்­த­ரணி அரச தலை­வர் சட்­டத்­த­ரணி அனுர மெத்­த­கொ­ட­வால் கல்­கிசை முதன்மை நீதி­வான் மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து முதன்மை விசா­ரணை அதி­கா­ரி­யான காவல்துறை பரி­சோ­த­கர் நிசாந்த சில்வா நீதி­வா­னுக்கு பதி­ல­ளித்­த­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். விளக்­க­ம­றி­ய­லில் உள்ள பிர­திப் காவல்துறை மா அதி­பர் பிர­சன்ன நாண­யக்­கா­ர­வுக்குப் பிணை வழங்­கு­வதா இல்­லையா என்­பது குறித்து எதிர்­வ­ரும் மே முத­லாம் திகதி அறி­விக்­கப்­ப­டும் என்று கூறிய நீதி­வான் மொஹம்­மட் மிஹால் அது­வரை அவ­ரை­யும், வழக்­கின் இரண்­டா­வது சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­த­கர் திஸ்ஸ சுகந்­த­பா­ல­வை­யும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்க உத்­த­ர­விட்­டார். மன்­றில் கருத்து தெரி­வித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் பீ.ஏ. திசேரா தெரி­வித்­த­தா­வது-, இரா­ணு­வத்­தின் 112 ஆவது பிரி­கேட் தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் தற்­ச­ம­ய­மும் தொடர்­கி­றன. மேல­தி­க­மாக மூன்று இரா­ணு­வத்­தி­ன­ரின் வாக்­கு­மூ­லம் பதிவு செய்­யப்­பட்­டது. லசந்த விக்­ர­ம­துங்­க­வு­டன் சேவை­யாற்­றிய நிர்­மலா கண்­ணங்­கர எனும் ஊட­க­வி­ய­லா­ள­ரின் வாக்­கு­மூ­லத்­தை­யும் நாம் பதிவு செய்­தோம். அதன்­போது அவர் லசந்த கொலை செய்­யப்­பட்ட போது சம்­பவ இடத்­துக்­குச் சென்­ற­தா­க­வும் அப்­போது அங்­கி­ருந்த லசந்­த­வின் காருக்­குள் அவ­ரது குறிப்­புப் புத்­த­கத்தை அவ­தா­னித்­த­தா­க­வும், பின்­னர் அது தொடர்­பில் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் பிர­சன்ன நாண­யக்­கா­ர­வி­டம் வின­வி­ய­போது ஒரு செவி­ம­டுக்­கும் கருவி மட்­டுமே இருந்­தது என்று கூறி­னார், குறிப்­புப் புத்­த­கம் இருக்­க­வில்லை எனப் பதி­ல­ளித்­தார் என்­றும் தெரி­வித்­தார். சந்­தேக நபர் குறிப்­புப் புத்­த­கம் தொடர்­பி­லான தக­வல்­களை ஏதோ கார­ணத்­துக்­காக மறைக்­கின்­றார். பிணைச் சட்­டத்­தின் விதி­வி­தாங்­க­ளுக்கு அமை­வாக சந்­தேக நப­ரின் விளக்­க­ம­றி­யலை நீடிக்க வேண்­டும் என்­றார். பிர­திப் பொலிஸ் மா அதி­பர் பிர­சன்ன நாண­யக்­கார சார்­பில் அரச சட்­டத்­த­ரணி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தெ­கொட சிறப்­புப் பிணைக் கோரிக்­கையை முன்­வைத்­தார். எனது சேவை பெறு­நர் கடந்த பெப்­ர­வரி 13 ஆம் திகதி முழு நாளும் விசா­ரிக்­கப் பட்டு அன்று இரவு 10.45 மணிக்கு கைது செய்­யப்­பட்­டார். இன்று வரை விளக்­க­ம­ரி­ய­லில் உள்­ளார். ஏற்­க­னவே நான் முன் வைத்த இரு பிணைக் கோரிக்­கை­கள் நிரா­க­ரிக்­கப் பட்­டன. குற்­றப் புல­ன­ாய­வுப் பிரிவு விசா­ர­ணை­கள் நிறை­வ­டையவில்லை என­வும், சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­ட­லாம் என­வும் கூறிய விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே பிணை நிரா­க­ரிக்­கப்­பட்­டன. எனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக முன்­வைக்­க­பப்­டும் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் எவ்­வித சாட்­சி­யங்­க­ளும் இல்லை. அந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் அடிப்­ப­டை­யற்­றவை. லசந்த கொலை உட்­பட அந்­தக் காலப் பகு­தி­யில் இடம்­பெற்ற பல்­வேறு கொலை­களை யார் செய்­தார்­கள் என்­பது முழு நாட்­டுக்­கும் தெரி­யும். அது இர­க­சி­ய­மல்ல. இது தொடர்­பில் அப்­போ­தி­ருந்த முன்­னணி இரா­ணு­வத் தலை­வர்­கள் செய்த சதி நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் ஊட­கங்­கள் எழு­தி­யுள்­ளன. எனவே அது குறித்து யாருக்­கும் ஊகித்­துக்­கொள்ள முடி­யும். லசந்­த­வின் குறிப்­புப் புத்­த­கம் தொடர்­பி­லும், பொலிஸ் புத்­தக பதி­வு­கள் மாற்­றப்­பட்­ட­மை­யும் எனது சேவை பெறு­ந­ரின் ஆலோ­ச­னைக்கு அமைய செய்­யப்­பட்­டுள்­ளன என்று குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரிவு கூறு­கின்­றது. எனி­னும் அது தொடர்­பில் பெறப்­பட்ட சாட்­சி­யங்­க­ளில் ஒன்­றில் கூட எனது சேவை பெறு­ந­ரின் பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. தற்­போது சுனில் குமார வழங்­கிய உடற்கூற்றுப் பரி­சோ­தனை அறிக்கை பொய் என நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. சிறப்பு மருத்துவ நிபு­ணர் மொஹான் டி சில்­வா­வின் அறிக்கை ஊடா­க­வும், சட்ட மருத்துவ அதி­காரி அஜித் தென்­ன­கோன் தலை­மை­யி­லான மூவர் கொண்ட குழு­வின் அறிக்கை ஊடா­க­வும் அது உறு­தி­யா­கி­யுள்­ளது. எனவே சுனில் குமா­ர­வு­ட­னான தொடர்­பா­டல் விசா­ர­ணை­க­ளுக்குப் பாதிப்­பாக அமை­யப்­போ­வ­தில்லை. அடிப்­ப­டை­யற்ற விட­யங்­களை நிரா­க­ரித்து சந்­தேக நப­ருக்குப் பிணை வழங்க வேண்­டும் என்று கோரு­கின்­றேன் – என்­றார். பிணைக் கோரிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து முதன்மை விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்வா கருத்­துக்­களை முன்­வைத்­தார். “லசந்­த­வின் கொலை இடம்­பெற்ற 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திக­திக்­கும் 2015 ஆம் ஆண்டு வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கும் இடையே சட்­டத்­தின் ஆட்சி எந்­த­ள­வில் இருந்­தது என்­பது எலோ­ருக்­கும் தெரி­யும். இந்­தக் காலப்­ப­கு­தி­யில் சி.ஐ.டி.க்கு கைய­ளிக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளில் சி.ஐ.டி. லசந்­தவை பின் தொடர்ந்த 5 தொலை­பே­சி­களை தொலை­பேசிக் கோபுரத் தக­வல்­க­ளுக்கு அமையக் கண்­ட­றிந்­த­னர். அவை இரா­னுவப் புல­ன­ாய்வுப் பிரி­வுக்கு சொந்­த­மா­னவை என்­ப­தை­யும் அவர்­கள் வெளிப்­ப­டுத்­தி­னர். அந்த விசா­ர­ணை­கள் உட­ன­டி­யாக அப்­போ­தைய பொலிஸ் மா அதி­பர் மஹிந்த பால­சூ­ரிய சி.ஐ.டி.க்கு வேலைப் பளு அதி­கம் எனக் கூறி லசந்த, கீத் நொயார், உபாலி தென்­ன­கோன் தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் பயங்­க­ர­வாத புல­னாய்­வுப் பிரி­வுக்கு மாற்­றி­னார். அது தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் அப்­போ­தைய பயங்­க­ர­வாத புல­னாய்­வுப் பிரி­வின் பிர­தானி பிர­திப் பொலிஸ் மா அதி­பர் சந்ர வாகிஷ்ட, உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் பிர­சன்ன அல்­விஸ் உள்­ளிட்ட குழு­வால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதில் 11 இரா­ணு­வத்­தி­னர் அவ­ச­ர­காலச் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்டு 6 நாள்­க­ளில் பொலிஸ் பினை­யில் விடு­விக்­கப்­பட் டுள்­ள­னர். அது தொடர்­பில் நீதி­மன்­றுக் குக் கூட அறி­விக்­கப்­ப­ட­வில்லை. 2015 செப்­ரெம்­ப­ரில் நாம் இந்த விசா­ர­ணை­யைப் பொறுப்­பேற்ற போது முத­லில் செய்­யப்பட்ட அனைத்து விசா­ர­ணை­க­ளை­யும் ஆராய்ந்­தோம். அதன் பின்­னரே விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தோம். அதன்­ப­டியே முத­லாம் சந்­தேக நப­ரான பிணை­யில் உள்ள உட­லா­க­மவை கைது செய்­தோம். அவர் லசந்­த­வின் சார­தியைக் கடத்­திச் சென்று லசந்­தவை கோத்­தாவே கொன்­றார் என­வும் மிக் விமானக் கொள்­வ­னவு தொடர்­பி­லான விவ­கா­ரம் தொடர்­பில் எழு­தி­ய­மையே கார­ணம் என­வும் கூறு­வதை நிறுத்த வேண்­டும் என்­றும் அச்­சு­றுத்­தி­யுள்­ளார். நாம் அர­சி­யல் தேவைக்­காக விசா­ர­ணைச் செய்­ய­வில்லை. அவ்­வாறு செய்­தால் அரசு மாறி­னால் நாமும் இந்த சந்­தேக நப­ரான பொலிஸ் அதி­கா­ரி­க­ளைப் போன்று குற்­ற­வா­ளிக் கூண்­டில் நிற்­போம் என்­பது எமக்குத் தெரி­யும். லசந்­த­வின் குறிப்­புப் புத்­த­கத்தை பொலிஸ் பரி­சோ­த­கர் வீர­சிங்­கவே மீட்­டுள்­ளார். அதை அவர் அப்­போது கல்­கிசை குற்­ற­வி­யல் பொறுப்­ப­தி­கா­ரி­யான, தற்­போ­தைய 2 ஆம் சந்­தேக நபர் சுகந்­த­பா­ல­வி­டம் விசா­ர­ணை­க­ளுக்­காகக் கொடுத்­துள்­ளார். இந்­த­நி­லை­யில்­தான் 3 ஆவது சந்­தேக நபர் நாண்­யக்­கார அந்தப் புத்­த­கம் உள்­ளிட்ட சாட்­சி­யங்­களை மாற்ற அவ­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார். முன்­னாள் பொலிஸ் மா அதி­பர் விக்­ர­ம­ரத்ன கோரியே லசந்­த­வின் குறிப்­புப் புத்­த­கம் கைமா­றி­யுள்­ளது. விளக்­க­ம­றி ­ய­லில் உள்ள பிர­திப் பொலிஸ் மா அதி­பர் பிர­சன்ன நாண­யக்­கா­ர, முன்­னாள் பொலிஸ் மா அதி­பர் ஜயந்த விக்­ர­ம­ரத்ன, முன்­னாள் பாது­காப்புச் செய­லர் கோத்­தா­பய ராஜ­பக்ச ஆகி­யோர் லசந்த விக்­ர­ம­துங்­க­வின் கொலை, அத­னு­டன் தொடர்­பு­டைய சாட்சி அழிப்பு உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­க­ளு­டன் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்­ற­னர் என்று சந்­தே­கிக்­கின்­றோம். அத­னா­லேயே இந்த விட­யத்­தில் விட­யம் அறிந்­த­வர்­க­ளின் வாக்கு மூலங்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­றோம். 3ஆம் சந்­தேக நபர் உயர் பொலிஸ் அதி­கா­ரி­யாக இருந்­த­வர் என்ற ரீதி­யில் அவ­ருக்குப் பொலிஸ் தினைக்­க­ளத்­துக்­குள் செல்­வாக்கு உள்­ளது. அவர் பிணை­யில் இருப்­பின் விசா­ர­ணை­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டும். எனவே பிணை வழங்க வேண்­டாம்.-என்­றார். வாதங்­களை செவி­ம­டுத்த நீதி­வான் பிணை தொடர்­பில் எதிர்­வ­ரும் மே 1 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­டும் என்று தெரி­வித்து அது­வரை சந்­தேக நபர்­களை விளக்­க­ ம­றி­ய­லில் வைக்க உத்­த­ர­விட்­டார்

No comments