இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சிறப்புக் கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் நடைபெறவுள்ளது.
முல்லையில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக மாகாண சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையிலான மாகாண சபையினர் முல்லைத்தீவுக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் சபை அமர்வுகள் முடிவடைந்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது முல்லைத்தீவில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அடுத்த கட்டமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a comment