இலங்கை

கட்சிப் பிரச்சினையல்ல எமது எதிர்பார்ப்பு, புதிய அரசியல் யாப்பு- மனோ கணேசன்


ஐ.தே.க., ஸ்ரீ ல.சு.க. என்பவற்றுக்கிடையிலான பனிப் போர் தங்கள் பிரதான பிரச்சினை அல்ல எனவும் தம்முன்னுரிமை பட்டியலில் முதலிடம் இனப்பிரச்சினைக்குத் தீர்வேயாகும் எனவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு, பிரிபடாத நாட்டுக்குள்ளே தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்புப் பணியை ஆரம்பித்தோம். அதில், நான், சம்பந்தன் உட்பட அனைத்து கட்சித் தலைவர்களும் இருக்கிறோம். ஆனால், தற்போதைய அரசியல் சந்தடிகளில் காணாமல்போயுள்ள புதிய அரசியலமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். பிரதமர் தலைமையிலான வழிகாட்டல் குழுவை மீண்டும் கூட்ட வேண்டும். புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment