தெளிவாகவே பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் வெவ்வெறு கட்சிகள் எனவும், பொதுஜன பெரமுன மக்களின் செல்வாக்குள்ள பிரபலமான கட்சியாக மாறியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தெளிவான வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பறுவதே எமது அடுத்த கட்ட நடவடிக்கை எனவும் தமது கட்சி “ஹைப்ரிட்” வாகனம் போன்றது எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று பொதுஜன பெரமுனவின் கொழும்பு கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் தமது கட்சியின் ஒரு பிரிவாக இக்கட்சியை பார்க்கின்றனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இத்தகையவர்களுக்கு வித்தியாசப்படுத்திப் பார்ப்பதற்கு தெளிவாகவே இக்கருத்தை பஷில் ராஜபக்ஷ வெளியிட்டார். பொதுஜன பெரமுனவின் கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் பணி அடுத்த கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
Post a Comment