காவிரிப் போராட்டம் : அரசியலா? அக்கறையா?
ஒஎன்ஜிசி, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், நீட் என அடிக்கிக் கொண்டே போகலாம். சரி அதற்கு முன்பெல்லாம் பிரச்னையே இல்லையா...? என்றால் ஆம் உண்டு.. பிரச்னைகளும், மக்கள் போராட்டங்களும் இல்லாத நிலை எப்போதும் நம் மக்களுக்கு வந்தது இல்லை என்பது தான் உண்மை.
வரண்டுபோயுள்ள காவேரி ஆறு -கல்லணை |
எங்கேயோ சிறிய போராட்டமாக தொடங்கியது தான் ஜல்லிக்கட்டு போராட்டமும்... எங்கள் கலாச்சார விளையாட்டை தடை செய்ய நீங்கள் யார்? என்ற முழக்கத்துடன் தொடங்கியது, கடல் கடந்தும் நாட்கள், நாட்களாய் நீடித்தது.
அங்கு தலைவன் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை... எந்த கட்சிக் கொடியையும் அங்கு பார்க்க முடியவில்லை... எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் அங்கு அனுமதிக்கபடவில்லை... எங்கே போராட்டம் நடக்கும், அது எப்படி நடக்கும் என்பதையெல்லாம் மாணவர்களே தீர்மானித்தார்கள்... அதை பொருத்தவரை அரசியல்வாதிகள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அந்த போராட்டத்தின் வெற்றியே அதுதான். காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பான செயல்திட்டத்தை மத்திய அரசு 6 வாரத்திற்குள் அமைக்காமல், மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், கர்நாடகாவில் தேர்தல் நடக்கயிருப்பதால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அன்றில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையில் போராட்டத்தில் குதிக்க துவங்கினர். கற்பூரம் ஏற்றி பூசனிக்காய் உடைத்து உண்ணாவிரதம் முடித்த அதிமுக முதல், இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சையில் ஸ்டாலின் தொடங்கி இருக்கும் நடை பயணம் வரை... பல போரட்டங்கள். சரி இவையெல்லாம் நமக்கான போராட்டம் தானா..? இல்லை தன்னை அடையாளப் படுத்திகொள்ள முனைகிறார்களா..? என்ற விமர்சனும் எழுகிறது. மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று சொன்ன அதிமுக, அன்று கடைசி வரை மத்திய அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. ஏன் இன்று வரை கூட. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம் என்றார், கூட்டணி கட்சி தலைவர்கள் புடைசூழ.
ஆனால், ‘அவருடைய கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் இன்று வரை காவிரி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு வேலை அவருக்கும் கர்நாடகா தான் முக்கியமோ என்னவோ... இங்கு ஸ்டாலின் உடன் திருநாவுக்கரசர் நடை பயணத்தில் பங்கேற்கிறார்’ என்று தமிழக பாஜக விமர்சிக்கிறது. சரி இந்த இரண்டு முக்கிய கட்சிகள் தவிர்த்து இதர பிற கட்சிகளும் கூட பல்வேறு போராட்டங்களை காவிரிக்காக முன்னெடுத்து வருகின்றனர். உண்மையிலே, மக்கள் நலன்தான் நோக்கம், காவிரி தான் முக்கியம் என்றால், வேற்றுமையை மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றுக் கூடி போராடி இருக்க வேண்டும். நம் எதிர்ப்பையும், நம்முடைய ஒற்றுமையையும் காட்ட அனைத்து கட்சிகளுமே இணைந்து அறவழிப் போராட்டங்களை தொடர்ந்து முன் எடுக்கலாமே. அதை விட்டு விட்டு ஆளுக்கு ஒருநாள் போராடுவதால் என்ன பலன் கிடைக்கும். காவிரி போராட்டங்களின் உச்சமாக தான் ஐபிஎல் போட்டியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் வந்து நிற்கிறது.
சரி அப்படி தடை செய்தால் காவிரி கிடைத்துவிடுமா சிலர் எழுப்புகிறார்கள். குறைந்த பட்சம் சர்வதேச அளவில் கவனத்தையாவது ஈர்க்க முடியும் அல்லாவா என்கிறார்கள் போராட்டத்தை அறிவித்தவர்கள். ஐபிஎல் இங்கு இல்லை என்றால் வேறு இடத்தில் நடத்தால், காவிரி..? என்று அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்
Post a Comment