மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். பிரதேச சபையின் உப தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்ஸதீன் 11 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்சீன் 9 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
Post a Comment