இலங்கை

வயலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! திருமலைகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு வயல் பிரதேசத்தில் தமது வயலுக்கு நீர்ப்பாச்ச சென்றவர் சடலமாக மீட்கப்பட்டதாக மூதூர் பொலிஸர் தெரிவித்தனர்.

கிளிவெட்டி பாரதிபுரத்தைச்சேர்ந்த 30 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் வலிப்பு நோயாளி எனவும் வலிப்பு நோய் தாக்கத்தினாலே மரணம் சம்பவித்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment