யுவதியின் சடலம் வீட்டிலிருந்து கண்டெடுப்பு
ஏறாவூர் – சித்தாண்டியில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை கண்டெடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதயன்மூலை எனும் கிராமத்தில் வசிக்கும் கே. கலைச்செல்வி (வயது 23) என்பவரின் சடலமே நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அயலிலுள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்றிருந்த தாய், வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் கயிற்றில் தொங்கியவாறு காணப்பட்டமையை அடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட குறித்த சடலம், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment