Header Ads

test

ந.கிருஷ்ணசிங்கம் ''எழுத்திய ஆண்தாய்மை''

என்னை விடுங்க.. என்னை விடுங்கடா.. மீண்டும் அவள் அன்று அப்படிக் கத்தத்தொடங்கினாள். மதன் பயந்து பதறியபடி அவளை அணைத்துக்கொண்டான். நெஞ்சுபதறும் ஒலிகேட்க.. நடுங்கியலறியபடி அவள், அவனை விழித்துப்பார்த்து.. ஈரம்படிந்த தனது கன்னங்களை அவனின் மார்பில் தேய்த்துக்கொண்டே வெம்பி.. வெம்பி அழுதாள்.

என்ன, பிறகும் அந்தக் கனவா?.. என்று, திரும்பத் திரும்பக்கேட்ட தன்கணவனுக்குப் பதிலாக, அவள் “உம்.. உம்”; என்று, மூச்சிழுத்து.. அதை ஒப்புக்கொள்ளவேஇ சிணுக்கம் தணியும்வரை அவளைத் தட்டிக்கொடுத்த மதன், அன்பொழுக அவளை அணைத்தவாறு, மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.

எமது, இனத்துக்குநேர்ந்த மனிதவதைகளாலும், கோரக்கொலைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுள் இந்த நளினியென்ற பெண்குருத்தும் ஒன்றாகி அந்த மண்ணில் உழன்றும் உயிர்பிரியாதுமீண்டு.. இன்று ஒருவனுக்கு, மனைவியென்ற அந்தஸ்த்தோடு, இடம்பெயர்ந்து இந்தப் பிறதேசத்து மண்ணில் வாழும்போதும், தனக்கு அங்குநடந்த அந்தக் கூட்டுவன்பாலியற் கொடுவதையை அவளால் மறந்திருக்க முடியவில்லை.

வருடங்கள்பல கடந்தபின்னும், தான்பிறந்த ஊரில் தனக்குநடந்த அந்த அரக்கத்தை விபரிக்கவோ மீட்டுப்பாற்கவோ அவள் விரும்பாவிடத்தும் அது அவளின் நினைவுத்தளத்தை நெருடிக்கொண்டே இருக்கின்றது.

தனது உயிரிலும்மேலான காதற்கணவனின் அன்பும், அவனின் மகாபுனிதமான மனிதாபிமானமும், தெய்வீகத்தன்மைமிக்க ஆண்தாய்மை என்பார்களே.. அதற்கு, உண்மையான உதாரணமான அவனின் இரக்கமும்தான் தன்னை மனைவியாக ஏற்று அழைத்துவந்து. தான்வாழும் இந்த நாட்டில்வைத்து மதிப்போடு குடும்பம் நடத்தும் பெரும்தன்மையெனப்போற்றும் அவளின், மனத்துள் திரும்பத் திரும்ப அந்த அராஜகக் கொடுமையின் கோரநினைவுகள்மட்டும் ஏனின்றும் உருக்கொண்டு உள்மனதுள்வருகின்றன. என்ற, கேள்விக்கு விடைகாணமுடியாது அவள் அடிக்கடி குழம்பிப்போவாள்.

தன்சமூகத்தில் சிலரின் எதிர்பாற்புகளுக்குஏற்ப தான் சீரழிந்து சாகாது, பைத்தியம் பிடித்து அலையாது.. இன்று பாதுகாப்பாக ஒரு புனிதனின் மனைவியாக வாழும் வியத்தகு பெருமை தனக்குக் கிடைத்திருக்கின்றதே! இப்படியும் ஒரு மறுவாழ்வு தனக்கு வாய்த்திருக்கின்றதே. என்ற பெருமையில் பூரித்தும்போனாலும் அவளின், அடிமனதுள் அந்த இரவில்.. நேர்ந்தஅநியாயக் காட்சியின் அவலித்த தோற்றம் இன்றும் அவளைவிட்டு அகலவில்லையே...

தனது, கணவர் அழைத்துச்சென்று காண்பிக்கும் வையித்தியரின் இனிமையான உபதேசங்களும், ஆலோசனைகளும் தனது ஆழ்மனத்தின் பாதிப்பை, அந்தக் குறுகுறுப்பை ஏன் இன்னும் முற்றாக அகற்றவில்லை. என்று பெரிதும் வருந்துபவள் தன்னைத்தானே சபித்துக்கொள்வாள்.

நீன்ற நாட்கள்கடந்து நேற்றைய இரவு அவள்போட்ட அந்தச்சப்தத்தாலும், கலவரக்குரலாலும் மீண்டும் கவலைகொண்ட அவளின் கணவன் மதன், காலையில் எழுந்ததும் வையித்தியரிடம்பேசி நேரஒழுங்கு பெற்றுக்கொண்டு, அவளுக்குத் தானே உணவூட்டி, அவளை அலங்கரித்து, அன்போடு.. அங்கே அழைத்துப்போனான்.       

No comments