Header Ads

test

மோசடிக்காரர்களுக்கு மீண்டும் பதவிகள்


மோசடிக்காரர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கும் நிலைமை, தற்போதைய அரசாங்கத்தில் அதிகரித்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

அதன் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபரை அவமரியாதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் நிமித்தம், ஊவா மாகாண முதலமைச்சர் வசம் இருந்த மாகாண கல்வி அமைச்சுப் பொறுப்பு பறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது மீண்டும் அந்த பொறுப்பு அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது கண்டனத்துக்கு உரிய விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த மாகாண கல்வி அமைச்சின் பொறுப்பு, ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீண்டும் வழங்கப்பட்டமைக்கு, இலங்கை ஆசிரியர்கள் சங்கமும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments