Header Ads

test

வாக்களித்தவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு முடியாது- மஹிந்த


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் கட்சியின் நிலைப்பாட்டை மீறி பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் கூடியபோதும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பிலிருந்து விலகியிருப்பதாகவே ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. உண்மையில் இது பிரதமரை தோற்கடிக்கச் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பிரேரணையல்ல. சுதந்திரக் கட்சியை பிரிக்கும் எண்ணத்தில் கொண்டுவரப்பட்டதேயாகும். என்றாலும் நாம் இதற்காக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திக் கொள்ளப்போவதில்லை. ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டையும் அறிவித்திருக்காமையினால் அரசாங்கத்திலிருந்து கொண்டு பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவ்வாறு வாக்களித்தவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றிய பின்னர் புதிய அமைச்சரவையொன்றை அமைப்பதா? இல்லையா ? என்ற தீர்மானத்தை நாட்டுத் தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமருமே முன்னெடுப்பார்கள். அதுபற்றி கருத்து கூறுவதற்கு எம்மால் முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments