Header Ads

test

அடுத்த கட்டநடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும்! - ஐரோப்­பிய ஒன்­றி­ய நாடாளுமன்ற குழு­


பிரதம­ருக்கு எதி­ரா­கக் கொண்­டு­ வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்மானம் அர­சால் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை ஜன­நா­ய­கத்­தின் ஒரு சிறந்த அம்­ச­மா­கவே இத­னைப் பார்க்­கி­றோம். தற்­போது கிடைத்­துள்ள இந்த வெற்­றியை அரசு சிறந்த முறை­யில் பயன்­ப­டுத்தி எதிர்­கா­லப் பய­ணத்தை முன்­னெ­டுக்­கும் என்று நம்­பு­கின்­றோம் என்று ஐரோப்­பிய ஒன்­றி­ய நாடாளுமன்ற குழு­வி­னர் தெரி­வித்­த­னர். இலங்­கைக்கு உத்­தி­யோ­கபூர்வ பய­ணம் மேற்­கொண்­டுள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பன்­னாட்டு வர்த்­த­கம் தொடர்­பான நாடா­ளு­மன்­றத் தூதுக்­குழு கொழும்­பில் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே இந்த விட­யங்­க­ளைத் தெரி­வித்­த­னர். ஜன­நா­ய­கப் பண்­பு­கள் இருக்­கின்ற நாட்­டில் பிரதம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்மானம் கொண்­டு­வ­ரும் உரிமை எதிர்க்­கட்­சிக்கு உள்­ளது. அதே­போன்று அத­னைத் தோற்­க­டிக்­கும் உரிமை ஆளும்­கட்­சிக்கு உள்­ளது. அந்த ஜன­நா­ய­கப் பண்பை இலங்­கை­யில் பார்த்­தோம். இந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்மானம் ஊடாக இலங்கை அர­சுக்கு ஒரு சிறந்த சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது. அந்­தச் சந்­தர்ப்­பத்­தைப் பயன்­ப­டுத்தி இலங்கை அரசை வலு­வாக்­கித் தேவை­யான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும் என்று நம்­பு­கின்­றோம். கிடைத்­துள்ள இந்த வெற்­றி­யின் ஊடாக இலங்கை அர­சு மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்து தீர்க்­கப்­ப­டாத பல நெருக்­க­டி­க­ளுக்கு தீர்­வு­கா­ணும் என்று எதிர்­பார்க்­கின்­றோம் என்­ற­னர்.

No comments