Header Ads

test

சிரியாவில் வான் தாக்குதல்! 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பொதுமக்கள் பலி!

சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

கிழக்கு கூட்டா பகுதியில் உள்ள டவுமா நகரில் நேற்று வியாழக்கிழமை கிளர்ச்சியாளர்களை குறிவைத்து பஷார் அல் அசாருடைய அரச படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலிலேயே 5 குழந்தைகள் உட்பட 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், போராட்ட அமைப்புக்கும், இராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் 6 ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத் தாக்குதலில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments