Header Ads

test

கூட்டமைப்புடன் உடன்பாடு கையெழுத்திடவில்லை! - மனோ கணேசன்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, எதிர்த்து வாக்களிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளப்படவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தெஹிவளை விஜய வித்தியாலயாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை கொண்டு வந்தது. பிரதமர் அதற்கு பதிலளித்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments