Video Of Day

Breaking News

ரணிலை எதிர்த்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது.

No comments