Header Ads

test

சுதந்திர கட்சி, ஜ.தே.கவின் இணைந்து கரைச்சி பிரதேசசபையினை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி


பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதல் அமர்வு இன்று 09-04-2018 கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
முதலில் தவிசாளர் தெரிவுக்கான முன்மொழிவுகள் இடம்பெற்ற போது தமிழரசு கட்சியின் அருணாசலம் வேழமாலிகிதன் முன்மொழியப்பட்டார். இதன் போது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் ஜ. மோகன்ராஜ் எழுந்து வேழமாலிகிதன் தகுதியற்ற தவிசாளர் முன்மொழிவு எனத் தெரிவித்து த.ரஜனிகாந் அவர்களை மாற்றுத் தெரிவாக முன்மொழிந்தார்
இதன் போது வாக்கெடுப்பு இரகசியமாக நடத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்ட போது அதுவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மையின் அடிப்படையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் 17 உறுப்பினர்களும், சுந்திரகட்சியை சேர்ந்த இருவரில் ஒருவரும் ஜக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இணைந்து 19 உறுப்பினர்கள் வேழமாலிகிதனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மாற்றுத் தெரிவான ரஜனிகாந்துக்கு சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும், சிறிலங்கா சுந்திர கட்சியை சேர்ந்த ஒருவரும் என 13 பேர் வாக்களித்தனர். இந்த நிலையில் மேலதிக ஆறு மேலதிக வாக்குகளால் அ.வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யபட்டார்.
உபதவிசாளர் தெரிவின் போது தமிழரசு கட்சியின் சி. தவபாலனுக்கும், சுயேச்சைக் குழுவின் த.செல்வராணியும் முன்மொழியப்பட்டனர். இதுவும் பகிரங்க வாக்கெடுப்பு விப்பட்டு இதில் தமிழரசு கட்சியின் 17 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 20 பேர் தவபாலனுக்கும், சுயேச்சைக் குழுவின் 11 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவரும் இணைந்து 12 பேர் செல்வராணிக்கு வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈபிடிபியும் நடுநிலைமை வகித்து தமிழரசு கட்சி வெற்றிப் பெற உதவியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments