Header Ads

test

சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு இராணுப்பயிற்சியாம்?


இலங்கை இராணுவத்தின்; சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள பண்ணைகள் மற்றும் முன்பள்ளிகளில் பணியாற்றும் முன்னாள் போராளிகளிற்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 13ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருகின்ற நிலையில் அவர்களிற்கு பகுதி பகுதியாக விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது.தலைமைத்துவப்பயிற்சி எனும் பெயரில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் உள்ள பனாங்கொடை முகாமில்; 21 நாட்கள் தொடர்பயிற்சி வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியிலும் இராணுவ சீருடையுடன் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. 
பயிற்சிக்கு ஏதுவாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் 21 நாள் தொடர் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்காக தேராவில் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


No comments