Video Of Day

Breaking News

பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகை பணம் செலவிடுவதான கூற்றை சபாநாயகர் நிராகரிப்பு


சில அரசியல் கட்சிகள் பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகையான பணத்தை செலவிடுவதாக சில கட்சிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. 'சில அரசியல் கட்சிகள் பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகையான பணத்தை செலவிடுகின்றது' என்ற கூற்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார். பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் மே மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையில், பாராளுமன்ற கூட்ட அமர்வு நிகழ்விற்கு பெருந்தொகையான பணம் செலவிடப்படுவதான கூற்று திரிவுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். மே மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள இந்த நிகழ்விற்காக பாராளுமன்ற உணவுக்காக தனிப்பட்ட ரீதியில் கூட பணம் செலவிடப்படுவதில்லை. பாராளுமன்ற அலுவல்களுக்கான செலவு வழமைப்போலவே இடம் பெறும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

No comments