Header Ads

test

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்சின் துணைவி மரணம்

அமொிக்காவின் முன்ளாள் அதிபர் ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அவர்களின் துணைவி பார்பரா புஷ் மரணமடைந்துள்ளார்.

92 வயதுடைய பார்பரா புஷ் உடல்நலம் பாதிப்படைந்திருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக முன்னாள் அதிபர் புஷ் அவர்களின் செய்தித் தொடர்பாளர் செய்தி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இதேபோன்று மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments