வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில், மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படமாட்டார் என்று, கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து, இரா.சம்பந்தனிடம் நேற்று திருகோணமலையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்த போதே, அவர் வடக்கு மாகாணசபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
Post a Comment