Header Ads

test

சன் சீ கப்பலில் கனடா சென்ற நயினாதீவு இளைஞன் கொலை! தெரிய வந்த உண்மை

யாழ்ப்­பாண இளை­ஞன் ஒருவர்,கனடாவில் வெட்டிக் கொலை செய்­யப்­பட்­ட தகவல், சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளின் பின்­னர் அவரது குடும்பத்தினருக்கு தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த அதிர்ச்­சித் தக­வலை கனடிய பொலி­ஸார் அங்­குள்ள உற­வி­ன­ரி­டம் கூறி உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது குடும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர். நயி­னா­தீ­வைச் சேர்ந்­த­வ­ரும் யாழ்ப்­பா­ணம் கச்­சே­ரி­ய­டியை வசிப்­பி­ட­மாக் கொண்­ட­வ­ரு­மான கன­க­ரட்­ணம் கிருஷ்­ண­கு­மார் (வயது – 40) என்­ப­வரே கொல்­லப்­பட்­டார்.

அவர் முக­வர் ஊடாக சன் சீ கப்­ப­லில் வெளி­நாட்­டுக்­குச் சென்­றி­ருந்­தார். கன­டா­வில் அவ­ரது உற­வி­னர் ஒரு­வர் அவ­ரைப் பொறுப்­பேற்­றி­ருந்­தார். 2015 ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் அவ­ரது தொடர்பு அங்­குள்ள உற­வி­ன­ருக்கோ யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள பெற்­றோ­ருக்கோ கிடைக்­க­வில்லை. இந்த நிலை­யில் அங்கு இடம்­பெற்ற ஒரு சம்­ப­வம் ஒன்­றில் அதே நாட்­டைச் சேர்ந்த சந்­தே­க­ந­பர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரி­டம் நடத்­திய விசா­ர­ணை­யி­லேயே திடுக்­கி­டும் தக­வல்­கள் வெளி­வந்­தன. இலங்­கை­யர்­கள் இரு­வர் உட்­பட 8 பேர் அவ்­வாறு வெட்­டிக் கொல்­லப்­பட்டு அங்­குள்ள பூந்­தோட்­டம் ஒன்­றில் புதைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது. தற்­போது அவர்­க­ளது எலும்­புக்­கூ­டு­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

அவர்­க­ளில் ஒரு­வர் யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்­த­வ­ரது என்­ப­தனை அங்­குள்ள உற­வி­ன­ரைக் கொண்டு பொலி­ஸார் நேற்­று­ முன்­தி­னம் விசா­ரணை செய்து உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள கு­டும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர். ஏனைய விட­யங்­கள் நாளை  அறி­விக்­கப்­ப­டும் என்று அந்­த­நாட்­டுப்
பொலி­ஸார் கூறி­யுள்­ள­னர் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

No comments