இலங்கை

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று கூடுகிறது


ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்ட அரசியல் சபை இன்று கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று மாலை அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதியமைச்சர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

இதன்போது, கட்சியின் பதவி நிலைகள் குறித்து இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 26 ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment