Header Ads

test

அட்டனில் தீ விபத்து! குடியிருப்பு எரிந்து நாசம்!

அட்டன், ருவான்புர பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் திடீரென தீ பரவியமையால் குடியிருப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தினால் குடியிருப்பு முற்றாக ஏரிந்துள்ளமையினால் உடைமைகள் அனைத்தும் தீயில்  கருகியதாகவும் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை.

மின்னொழுக்கே குறித்த விபத்துக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.




No comments