Header Ads

test

தொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்!


யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சுமூக நிலையினை தோற்றுவிக்க பேச்சுக்களில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து, அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையை ஏற்படுத்தும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் இன்று வவுனியாவுக்குச் சென்றிருந்தனர்.

இதனிடையே இன்று செவ்வாய் காலையில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியைச் சூழ்ந்து கொண்ட சிங்கள மாணவர்கள், தம்மிடமிருந்து நேற்று பறிக்கப்பட்ட பொருட்களை மீள கையளிக்க வலியுறுத்தி வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.

இதனையடுத்து இலங்கை காவல்துறைக்கும், முதல்வருக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டது. மாணவர்களைச் சந்தித்த காவல்துறை அத்தியட்சகர் வளாகத்தில் மத தலங்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டஇடத்திலேயே வணக்கத்தலங்களை அமைக்க முடியும் என்று தெரிவித்தார்.

அரை ஏக்கர் வீதம் நான்கு மதங்களுக்குமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வணக்கத்தலங்கள் அமைக்கப்படும். அதுவரை எவ்வித முரண்பாடான நிலமைக்கும் செல்லக்கூடாது எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சுமூக நிலையை தோற்றுவிக்கவும் மூடப்பட்ட வளாகத்தை திறக்கவும் மாணவர் ஒன்றியம் பேச்சுக்களினை ஆரம்பித்துள்ளது.

No comments