Header Ads

test

இலங்கையின் புதிய வரைப்படம் எதிர்வரும் மே மாதம்


கொழும்பு துறைமுக நகர நிர்மானம் மற்றும் ஏனைய பகுதியில் இடம்பெறும் பூகோள மாற்றத்துக்கு அமைய தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் எதிர்வரும் மே மாதம் வெளியிட நில அளவைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
 
குறித்த வரைப்படத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக திணைக்கள அதிபர் பீ. என். பீ. உதயகந்த தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இனங்கண்டு, அவற்றை வரைபடமாக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.
 
இதற்கமைய, அதனை வரைப்படமாக அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
 
இந்த நிலையில், மே மாத இறுதிக்குள் இலங்கையின் புதிய வரைப்படத்தை வெளியிட முடியும் என எதிர்ப்பார்ப்பதாக திணைக்கள அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments