Header Ads

test

நாட்டின் கரையோரப் பிரதேசங்களுக்கு இன்று கடுமையான மழை


நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்றும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளுக்கு கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும், மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய கரையோரப் பகுதிகளிலும் மாலை வேளையிலும், இரவிலும் இடைக்கிடை மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் உள்ளன. கரையோரப் பகுதிகளுக்கு பலமான காற்று வீசக் கூடும் எனவும், இதனால், அலையின் வேகமும் அதிகமாக இருக்கும் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது

No comments