இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி காவல்துறைப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
தந்தையும் இரு பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
37 வயதுடைய தந்தை நேற்றிரவு தனது பிள்ளைகளான 10 வயது மகனுக்கும் 7 வயது மகளுக்கும் உணவில் கிருமிநாசியைக் கலந்து கொடுத்து தானும் உட்கொண்டுள்ளார்.
இதனை, அயலிலுள்ள உறவினர்கள் அறிந்து மூவரையும் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து ஒவ்வொருவராக தனித் தனி அம்பியூலன்சில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment