Video Of Day

Breaking News

8 மாதக் குழந்தையுடன் தொடருந்தின் முன் பாய்ந்து தந்தை தற்கொலை!

தந்தையொருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று குருணாகலில் இடம்பெற்றுள்ளது.

குருணாகல், பல்லேகொட்டுவ பகுதியிலே குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து 30 வயதுடைய தந்தையொருவரே  இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பல்லேகொட்டுவ – வெல்ல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபர்  2 ஆவது மனைவியுடன் வாழ்ந்துவருவதாகவும் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இரு சடலங்களும் குருநாகல் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments