இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் பலி!
பலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர்.
பாலஸ்தீனர்கள் நடத்திய போராடங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த மக்கள் மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் வசிப்பிடங்களை நோக்கி குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போதே பாலஸ்தீன மக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளடக்கபடுகிறார்.

Post a Comment