Header Ads

test

ரணிலின் தலைவிதியை தீர்மானிக்கும் ‘48 மணிநேரம்


தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக மகிந்த அணியும், எதிராக ஐக்கிய தேசியக்கட்சியும் தீவிர பரப்புரைகளிலும், சந்திப்புகளிலும் ஈடுபட்டுவருவதால் தெற்கு அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் 2 ஆம் திகதியும், 3 ஆம் திகதியும் கொழும்பில் நடைபெறவுள்ள 6 க்கும் மேற்பட்ட அரசியல் சந்திப்புகளே ரணிலின் தலைவிதியையும், கூட்டரசின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தலைமை அமைச்சருக்கு அமைச்சருக்கு எதிராக 54 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் மகிந்த அணியால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது எதிர்வரும் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதமும், வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் 106 ஆசனங்கள் இருக்கின்றஅபோதிலும், ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலர், அக்கட்சியின் தலைவரான ரணிலுக்கு எதிராக செயற்பட தயாராகி வருவதாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்காது என்று கூறப்படுவதாலும், ஜே.வி.பி. எடுத்துள்ள முடிவாலும் , சுதந்திரக்கட்சியின் மௌனத்தாலும் பெரும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது.

No comments