Video Of Day

Breaking News

வெசாக் தினம் 432 கைதிகள் விடுதலை!

வெசாக் பௌர்ணமி தினமான இன்று 432 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பின் கீழ் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறு குற்றங்கள் புரிந்தோரே இவ்வாறு விடுதலை  செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் துசார உபுல் தெனிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவர்களுள் 23 ​பேர் ஏனைய குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விடுதலைசெய்யப்படவுள்ள ஏனைய 405 பேரில் 4 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments