யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து இன்றையதினம்(06-04-2018) வெள்ளிக்கிழமை நண்பகல் போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடக்கம் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக வளாக பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றி 108 தேங்காய் உடைத்து போதனை சாரா ஊழியர்கள் போராட்டம் நடத்தனர்.
Post a Comment