Header Ads

test

மட்டக்களப்பில் இயந்திரம் மூலமாக மீள நெல் நடுகை திட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள் நெல் நடுகை திட்டத்தினை விவசாய திணைக்களம் அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இந்த நிலையில் மண்டபத்தடி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக இயந்திரம் மூலம் மீள நெல் நடுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திர நெல் விதைப்பு மூலம் அதிகளவான விளைச்சலை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன் சேதன பசளைகளை பயன்படுத்துவதன் அளவும் குறைவாக இருப்பதன் காரணமாக செலவும் அதிகளவில் மீதப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிகழ்வில் விவசாய திணைக்கள வழிகாட்டல் உத்தியோகத்தர் கே.ஜெயக்காந்தன், விவசாய போதனாசிரியர்களான ஏ.தினேஸ்காந், எஸ்.ஞானப்பிரகாசம், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இதன்போது கருத்து தெரிவித்த விவசாய போதனாசிரியர் ஏ.தினேஸ்காந்த்,

வழமையாக ஏக்கருக்கு 30 தொடக்கம் 35வரையான மூடை நெல்லே விதைப்பு மூலம் பெற்றுக்கொடுப்பதாகவும், இந்த இயந்திரத்தின் மூலம் விதைப்பதன் காரணமாக 40 தொடக்கம் 45மூடை நெல் அறுவடையினைப்பெற்றுக் கொள்ளமுடியும்.

இயந்திரத்தின் மூலம் வரைசாயாக நெல் நாற்றுகளை நடுவதன் மூலம் களைக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் நெல் பயிர் தொடர்பான நோய்த்தாக்கமும் குறைவானதாகவே இருக்கும் குறிப்பிட்டுள்ளார்.

No comments