விரக்தியில் கேப்பாபிலவு மக்கள்!
சொந்த நிலத்தில் வாழும் உரிமை மறுக்கபட்டுள்ளது. நாம் எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன எனவே இனியும் போராடிப் பயனில்லை. எனது பிறவிப் பாவங்களைப் போக்க இமயமலை சென்று எனது வாழ்வைக் கழிக்கவுள்ளேன் என்று கேப்பா பிலவில் போராடும் மக்களுக்கு முன்னுதாரணமாக உள்ள ஆறுமுகம் வேலாயுதம் கவலையுடன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; எமது நாடு என்று எல்லோரும் கூறு கின்றார்கள் அதனுடைய அர்த்தம் எமக்கு விளங்கவில்லை. இங்கு பலரும் தங்களது உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்கள் இடம்பெறுகிறது.
வீதிகளிலே மக்கள் பேராடுகிறார் கள். அவர்களுடைய வாழ்க்கை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக வீதிகளிலேயே கழிக்கப்படுகின்றன. எமது மக்கள் தங்களது இன்ப துன்பங்க ளைத் துறந்து. உரிமைக்காக மட்டுமே போராடுகிறார்கள். ஆனால் எமது தலைமைகளாலோ, அல்லது அரசாலோ எமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை. நாம் கைவிடப்பட்டுள்ளதாகவே உணர்கிறோம். போராடும் அனைவரும் சாகும் வரை வீதிகளி லேயே இருந்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றனது.
தொடர்ச்சியாகப் போராடினோம், கேப்பாபிலவில் உள்ள எங்களது காணிகளை பிடித்து வைத்திருக்கும் இராணுவத்தை வெளியேறக்கோரிய எமது போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. புனிதர்கள் புதைக்கப்பட் டுள்ள எமது மயானங்களில் இராணுவம் குரங்குக் கூத்தாடுகிறது. கேட்ப்பதற்கு யாரும் இல்லை. கடந்த 5 நாள்களாக ஆன்மிக வழியில் போராடுகிறோம்.
இன்று அந்தப் போராட்டத்தின் இறுதிநாள். இதனுடைய நிறைவிலும் எமது உரமை மறுக்கப்பட்டால் நாம் வாழ்வது பயனற்றது. எனவே இந்த மக்களை வழிநடத்திக் கொண்டிப்பவன் என்ற வகையில் நான் இந்த மண்ணில் பிறந்த பாவங்களைப் போக்க இமயமலைக்குச் செல்லவுள்ளேன். அங்கு சென்று எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு ஆஞ்சநேயரிடம் மண்டியிடுவேன் இதுதான் எனது இறுதி முடிவு என்றார்.

Post a Comment