Header Ads

test

ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுல்

இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனூடாக இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் பெரும் நன்மையை அடைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கை ஏற்றுமதியாளர்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜி.எஸ்.பீ. வரிச்சலுகை குறித்த ஆவணத்தில் கைச்சாத்திட்ட நிலையில், இலங்கை உட்பட 120 நாடுகள் இந்த சலுகையினை பெறவுள்ளன.

இதற்கு அமைய சுமார் 5 ஆயிரம் பொருட்களை வரிச்சலுகையுடன் இந்த 120 நாடுகளும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments