Video Of Day

Breaking News

முன்னணி உறுப்பினர் சடலமாக மீட்பு! கொலையா?

நேற்று (24) இரவு முதல் காணாமல் போன வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன்
செந்தூரன் (37-வயது) இன்று (25) காலை தொண்டமனாறு, மயிலந்தனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொண்டமனாறு மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் செந்தூரனின் மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும தலைக்கவசம் உள்ளிட்டவை நேற்று இரவு 7.20 மணியளவில் காணப்பட்ட நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டனர்.

இதன் பின்னரே அவர் காணாமல் போனார். இது குறித்து குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

No comments