Video Of Day

Breaking News

முல்லையில் சிப்பாய் பலி:நால்வர் கவலைக்கிடம்?

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதேசத்தில் இராணுவ ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன், ஏனையவர்கள் குணமடைந்து வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments