Header Ads

test

ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டம்!

ஜேர்மனிய ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் பருவநிலை அவசரநிலையை வலியுறுத்தி எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘நமக்கு என்ன வேண்டும்? பருவநிலைக்கான நீதி! எப்போது வேண்டும்? இப்போதே வேண்டும்’, உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், இதன்போது போராட்டக்காரர்கள் 13 ஜேர்மனிய அரசத்துறைகளுக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டிற்குள் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இதுபோன்ற பருவநிலை ஆர்வலர்களின் போராட்டங்கள் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது

No comments