Header Ads

test

மணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்

யாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சொரூபம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலுக்கு வந்த சிலர் சொரூபம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த செயற்பாடு, மதங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல முறை இந்த சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. ஆகையால் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய செயற்பாடுகளை கண்டிப்பதுடன், சிலை உடைத்தவர்களை இனங்கண்டு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments