சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை கண்காணிப்பு குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கவினால் இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்சைக்குரிய குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையே இதன்போது சமர்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலரிடமும் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment