Header Ads

test

அகதிகளை வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல்: சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கு வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல் என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
ஆகையால் இலங்கை அரசாங்கம், அகதிகளை வெளியேற்றும் செயற்பாட்டை கைவிட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அனுசரணையுடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மையின முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆனாலும் அண்மையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களினால் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழும் நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பினால், ஆயுதக் குழுக்களின் வன்முறை மற்றும் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனையை கூட அவர்கள் எதிர்நோக்க நேரிடும்.
ஆகையால் குறித்த அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்றும் யோசனையை கைவிட்டு விட்டு, அவர்கள் விடயத்தில் சட்டரீதியான அணுகுமுறையினை பின்பற்ற வேண்டும்.
அந்தவகையில் மனித உரிமை மீறல் வன்முறைகளுக்குள் சிக்கும் வகையில்நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
ஆகையால் அகதிகளாக வருகை தந்துள்ள மக்களையும் ஒன்றிணைத்து செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என பிராஜ் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள 1200க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதில் பாகிஸ்தானின் அஹமதியா முஸ்லிம்களே அதிகம் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments