Header Ads

test

இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து பிரித்தானியா அவதானம்

இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு, இந்த வருடமும் உரிய அழுத்தத்தை தமது அரசு பிரயோகிக்குமென பிரித்தானியா தெரிவித்துள்ளது.
2018 வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய செயலக மனித உரிமைகள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊடக சுதந்திரம், ஆண், பெண் சமத்துவம், சட்டத் திருத்தங்களை மேம்படுத்துவதற்கான உத்வேகமளிப்பது என்பன தொடர்பில் தாம் அழுத்தம் வழங்கவுள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகள் தாமதமாக நடைபெறுவதாகவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

No comments