Video Of Day

Breaking News

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த டெல்லி விஜயத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து. கலந்துரையாடலொன்றில் ஈடுபடுவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments